தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார் மம்தா!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 06:42 pm
mamata-banerjee-ends-dharna-against-modi-govt

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, கடந்த மூன்று நாட்களாக மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தி வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இன்று மாலை போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

சாரதா சிட் ஃபண்ட், கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் சென்ற நிலையில், அவர்கள் வாரண்ட் இல்லாமல் செயல்படுவதாக மம்தா குற்றம் சாட்டினார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, மத்திய அரசு, சிபிஐ- யை பயன்படுத்தி, இந்தியாவின் தலைசிறந்த காவல்துறை அதிகாரிகளுள் ஒருவரான ராஜீவ் குமாரை களங்கப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகளை, கொல்கத்தா போலீசார் பிடித்து வைத்து, பின்னர் விடுவித்தனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மோடி அரசுக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் இறங்கினார் மம்தா. 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்திற்கு, நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இன்று இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவல்துறை அதிகாரி ராஜீவ் குமாரை கைது செய்யக் கூடாது. ஆனால், அவர் சிபிஐ முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், என்று தீர்ப்பளித்தது. 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கூறிய மம்தா, தனது தர்ணா போராட்டத்தை முடித்துக் கொள்வதாக இன்று மாலை தெரிவித்தார். இந்த விவகாரத்தை டெல்லியில் மீண்டும் எழுப்ப உள்ளதாகவும் அவர் கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close