நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வதந்தி பரப்பிய இளைஞர் கைது

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 10:32 am
jharkhand-youth-arrested-for-fake-poll-schedule

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து போலியான அட்டவணை வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அட்டவணை எனக் குறிப்பிடப்பட்ட செய்தி அண்மையில் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது. ஆனால், அது போலியானது என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. அத்துடன் இதுதொடர்பாக டெல்லி காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான கோமுந்த் குமார் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் நடத்தி வரும் இணையதளத்தில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த வதந்தியை அவர் பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், வாட்ஸ் அஃப் குழுவில் வந்த தகவலின் அடிப்படையிலேயே அந்த செய்தியை வெளியிட்டதாக கோமுந்த் குமார் கூறியுள்ளார். இருப்பினும், அவரிடம் இருந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close