பிரதமர் மோடிக்கு ஆதரவாக களம் இறங்கிய வர்த்தகர்கள்

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 10:47 am
surat-mumbai-traders-finding-all-possible-ways-of-campaign-for-modi

பிரதமர் நரேந்திர மாேடி ஆட்சியில் வர்த்தகர்கள் நன்மை அடைந்திருப்பதாகவும், தொழில் செய்வது எளிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அவருக்கு ஆதரவாக பல வகைகளிலும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதால், தங்களின் பலதரப்பட்ட வரிச்சுமைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறியுள்ள வியாபாரிகள், மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, 'வரும் லோக்சபா தேர்தலில், நரேந்திர மாேடி தலைமையிலான, பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் அந்த கட்சியே ஆட்சி அமைக்க வேண்டும்' எனவும் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக, பா.ஜ.,வை ஆதரிப்பீர் என்ற வாசகத்துடனான பிரசாரம் செய்து வருகின்றனர். 

சூரத் மில்லிலிருந்து, துணி பண்டல்கள் கட்டப்பட்டு அனுப்பப்படும் பட்டிகளில், இந்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அங்குள்ள வியாபாரிகள், தாங்கள் பயன்படுத்தும் பில்களில், மாேடியின் படத்துடன், அவரை ஆதரிக்கும் வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

மும்பையை சேர்ந்த வியாபாரிகள் பலரும்,  மாேடிக்கு ஆதரவாக இதே போன்ற பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close