கிச்சடி கட்சிகளால் நாடு எப்படி வளர்ச்சிப் பெறும்?: நிதின் கட்கரி கேள்வி

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 03:43 pm
can-a-khichdi-government-ensure-the-development-of-the-country-nitin-gadkari

பாஜகவையும், பிரதமர் மோடியையும் எதிர்க்கும் ஒரே எண்ணத்தில் ஒன்று சேர்ந்துள்ள மாநில (கிச்சடி கட்சிகள்) கட்சிகளால் நாடு எப்படி வளர்ச்சிப் பெறும்? என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, மாநிலக் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னோட்டமாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிலையில், மாநிலக் கட்சிகளின் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியை விமர்சிக்கும் வகையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஹைதராபாதில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது:

பிரதமர் மோடி மற்றும் பாஜக எதிர்ப்பதில்தான்  எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒற்றுமையாக உள்ளனர். 
மாறாக,  நாட்டின் வளர்ச்சிக்காக தாங்கள் ஆற்றிய பணிகள், செயல்படுத்தியுள்ள திட்டங்களை முன்வைத்து பாஜகவுடன் விவாதம் நடத்த அவர்கள் தயாராக இல்லை.

நேற்றுவரை ஒருவரையொருவர்  வசைமாறி பொழிந்தவர்கள், இன்று பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் ஒன்றிணைந்துள்ளதாக கூறி வருகின்றனர்.

கிச்சடியை போன்ற மாநில கட்சிகளால் நாட்டின் வளர்ச்சியை எப்படி உறுதி செய்ய முடியும்?நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டுவரும் பாஜகவால்தான் நாட்டின் வளர்ச்சி சாத்தியப்படும்.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு மேல் மத்தியில் ஆட்சி செய்துள்ள காங்கிரசால் கூட வளர்ச்சியை முன்வைத்து ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுக்கவில்லை.

அதனால்தான் அவர்கள் மதவாதத்தை முன்னிருத்தி, பாஜகவுக்கு எதிராக முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என நிதின் கட்கரி கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close