மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா தலைவர்களும், தொண்டர்களும் அம்மாநிலத்தில் நுழைவதை தடுக்க முயற்சி செய்வதாகவும், அதற்கான விளைவுகளிலிருந்து அவரால் தப்ப முடியாது, என்றும் பாஜக தலைவர் அமித் ஷா எச்சரித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் அலிகாரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் அம்மாநிலத்திற்குள் நுழைவதை தடுக்க முயற்சி செய்து வருவதாகவும் அதற்கான விளைவுகளில் இருந்து தப்ப முடியாது, என்றும் எச்சரித்துள்ளார்.
"நேற்று முதல்வர் யோகி ஹெலிகாப்டர் வழியாக தரையிங்க அனுமதி கிடைக்கவில்லை. என்னையும் அனுமதிக்கவில்லை. அதே போல சிவராஜ் சிங் சவுகானையும் அனுமதிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதேபோல முதலில் அனுமதி மறுக்கப்பட்டு, பின்னர் ஒரு சிறிய இடத்தில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. இவை அனைத்துமே, தனது நேரம் முடிந்து விட்டது; பாரதிய ஜனதா வெல்லப்போவது உறுதி, என்பதாலேயே அவர் செய்கிறார்," என்று அமித் ஷா கூறினார். மேலும், "பாரதிய ஜனதா தொண்டர்கள் யார் என்று அவருக்குத் தெரியவில்லை. மேற்குவங்க மாநிலத்தில் 42 இடங்களில் 23 இடங்களை வெல்லும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்றும் கூறினார்
கொல்கத்தா காவல்துறை ஆணையரின் விசாரணையில் மம்தா குறுக்கிட்டதை குறிப்பிட்ட அமித் ஷா, "மம்தா ஒரு அதிகாரியை பாதுகாக்க முயற்சி செய்கிறார். ஏனென்றால் அவர் சில ஊழல் பற்றிய உண்மைகளை சிபிஐ-யிடம் சொல்லி விடுவார் என மம்தா பயப்படுகிறார்" என்று ஷா கூறினார்.
newstm.in