கண்ணாமூச்சி ஆடும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள்: கலக்கத்தில் முதல்வர்

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 12:46 pm
congress-mla-s-absent-political-crises-arise-in-karnataka

கர்நாடக மாநில அரசியலில் கடந்த மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பம் இன்னும் முடிந்தபாடில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர், கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கும், சட்டசபைக்கும் வராமல் இருப்பதால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு தீராத தலைவலியாக உள்ளது. 

கர்நாடகாவில், காங்., - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் பலம் இல்லாதால், அந்த கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. 

இந்நிலையில், அமைச்சரவையில் இடம் கிடைக்காத, காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர், எந்த நேரத்திலும், அணி மாறலாம் என்ற தகவல் வெளியானதால், அந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வேறு மாநிலத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

விடுதிக்கு சில எம்.எல்.ஏ.,க்கள் வராததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்களுடன் தொடர்பில் இருப்பதாக, அந்த கட்சித் தலைமை அறிவித்தது. இதனால், குமாரசாமியின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவியது. எனினும், சில நாட்களில் நிலைமை சரியானது. 

இந்நிலையில், கடந்த மாதம் நடந்த காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அந்த கட்சியை சேர்ந்த, நான்கு எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கவில்லை. அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, மாநில தலைமை அழைப்புக் கடிதம் அனுப்பியும், அவர்கள் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதற்கிடையே, இம்மாதம் துவங்கியுள்ள, கர்நாடக மாநில சட்டசபை கூட்டத் தொடரிலும் அந்த நான்கு எம்.எல்.ஏ.,க்கள் இதுவரை பங்கேற்கவில்லை. அவர்களிடம் விளக்கம் அளிக்கம் கேட்டு, முன்னாள் முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் செயல், ஆளும் கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் உள்ளனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால், முதல்வர் பதவி எந்த நேரத்தில் பறிபோகுமாே என, குமாரசாமி கலக்கம் அடைந்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close