ராபர்ட் வதேராவிடம் 2ம் நாளாக அமலாக்கத்துறை விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 12:46 pm
robert-vadra-at-ed-for-2nd-day-of-questioning

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் ராபர்ட் வதேராவிடம் இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துக்கள் வாங்கியதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்குத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

முன்னதாக, விசாரணையில் அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க ராபர்ட் வதேரா முன்ஜாமீன் கோரிய நிலையில்,  அவருக்கு டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இதையடுத்து ராபர்ட் வதேரா நேற்று டெல்லி ஜாம்நகரில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, ராபர்ட் வதேராவை ட்ராப் செய்ய அவரது மனைவி ப்ரியங்கா காந்தியும் உடன் வருகை தந்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ப்ரியங்கா, 'இந்த வழக்கில் எனது கணவருக்கு உறுதுணையாக நிற்பேன்' என்று மட்டும் தெரிவித்து விட்டு சென்றார். 

நேற்று காலை 11.20 மணிக்கு ஆஜரான ராபர்ட் வதேராவிடம் சுமார் 6 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, இன்றும் இரண்டாவது நாளாக வதேராவிடம் விசாரணை நடைபெறுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close