சீனாவுக்கு தெரியும் மோடியின் மார்பளவு: ராகுல் ஆவேசம்

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 03:26 pm
chaina-knows-about-modi-s-chest-size-rahul


டெல்லியில் நடைெற்ற பொதுக்கூட்டத்தில்,காங்., தலைவர் ராகுல் பேசுகையில், ‛‛மாேடியின் மார்பளவு 56 இன்ச் அல்ல; வெறும் 4 இன்ச் தான் என்பது, சீனாவுக்கு நன்கு தெரிந்துள்ளது. என்னுடன், 10 நிமிடம் கூட விவாதிக்க தயாராக இல்லாத பிரதமர் மோடி, பயந்து நடுங்குகிறார்’’ என்றார். 


‛‛நாட்டின் பிரதமராக உள்ள நரேந்திர மாேடி, மக்களை பிரித்தாளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நாட்டில் வசிக்கு அனைவரும் சமமானவர்கள். அனைவருக்கும், அனைத்து உரிமையும் உண்டு. இதைத்தான் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த நாடு, பல்வேறு மதத்தினரால் உருவாக்கப்பட்டது. இங்கு பிரித்தாளும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் தோற்கடிக்கப்பட வேண்டும். 

வரும் தேர்தல், இரு வேறு சிந்தனைகளுக்கு இடையே நடக்கும் போட்டி. அதில், மக்களை பிரிக்கும் சக்தி தோற்க வேண்டும்.அனைவரையும் விட, நாடு பெரியது; இந்த நாடு அனைவருக்கும் பொதுவானது. 

என்னுடன், 10 நிமிடம் கூட விவாதிக்க தயாராக இல்லாத மோடி, பயந்து நடுங்குகிறார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கைப்பாவையாகவே மாேடி செயல்படுகிறார். அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கையில் தான் மத்திய அரசின் ரிமாேட் கன்ட்ரோல் உள்ளது’’ என, அவர் பேசினார். 


ராகுலின் இந்த பேச்சுக்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‛‛பிரதமர் மாேடியைப் பற்றி சீனாவிற்கு நன்கு தெரியும் என, ராகுல் கூறுகிறார். மானசரோவர் செல்வதாக கூறிவிட்டு, சீனாவிற்கு சென்று, அங்குள்ள அரசியல் தலைவர்களை ரகசியமாக சந்தித்துவிட்டு வந்த ராகுல், இப்படி பேசுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை'' என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close