ரபேல் விவகாரம்: மோடி மீது ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 12:15 pm
rahul-slams-modi-over-rafale-deal

''நாட்டின் பாதுகாப்பு கருதி, பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரபேல் ரக போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட, பிரதமர் மோடி பேரம் பேசியுள்ளார்'' என, காங்., தலைவர் ராகுல் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். 

இது குறித்து, காங்., தலைவர் ராகுல் கூறுகையில், ‛‛ ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக, நாங்கள் ஓராண்டு காலமாக கூறி வருகிறோம். ஆனால், ஊழல் நடக்கவில்லை என, பிரதமரும், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கூறி வருகின்றனர். 

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, இந்தியா - பிரான்ஸ் அரசுகளிடையே பேச்சு நடந்து வந்த போது, தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு சாதகமாக செயல்பட, மோடி பேரம் பேசினார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

இதன் மூலம், பாதுகாப்பு துறைக்கு சொந்தமான, 30 ஆயிரம் கோடி ரூபாயை திருடி, தன் நண்பர் அனில் அம்பானிக்கு வழங்கியுள்ளார், மாேடி. 

இதன் மூலம், நாட்டை காக்கும் காவலன் எனக் கூறி வரும் மோடி, திருடன் போல் செயல்பட்டுள்ளார். ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனும், இந்த விவகாரத்தில் பொய் கூறியுள்ளார்’’ என அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close