சி.பி.ஐ.,யை பார்த்து நடுங்குகிறது காங்கிரஸ்: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 12:40 pm
congress-has-only-tried-to-hide-the-corruption-modi

‛‛சத்தீஸ்கரில், முந்தைய பா.ஜ., அரசின் மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் பணிகளில் மட்டுமே, ஆளும் காங்., அரசு, தீவிரம் காட்டி வருகிறது’’ என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மாேடி பேசுகையில், ‛‛சத்தீஸ்கரில், இதற்கு முன் ஆட்சி செய்த பா.ஜ., அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியது. 

தற்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ், அந்த திட்டங்களை முடக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

ஏழை மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கும் வகையில், மத்திய அரசு, ‛மோடிகேர்’ திட்டத்தை செயல்படுத்தியது. ஆனால், மாநிலத்தை ஆளும் தற்போதைய காங்கிரஸ் அரசு, அதை முடக்கியுள்ளது. ஊழல் செய்ய மட்டுமே தெரிந்த காங்கிரசார், தற்போது, சி.பி.ஐ., அதிகாரிகளை எதிர்கொள்ள அஞ்சுகின்றனர்.

மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், ஏழை விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், மாத ஊதியம் பெறுவோர் என அனைத்து தரப்பினரும் பலன் அடைவர்’’ என அவர் பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close