பங்களாவை காலி செய்யுங்க: ‛மாஜி’ துணை முதல்வருக்கு உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 01:00 pm
supreme-court-slaps-rs-50-000-fine-orders-tejashwi-yadav-to-vacate-government-bungalow

பீஹார் சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக இருந்த போது, அரசின் சார்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை உடனடியாக காலி செய்ய, பாட்னா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்த, தேஜஸ்விக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர், இதற்கு முந்தைய கூட்டணி ஆட்சியில், மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பு வகித்தார். இதையடுத்து, துணை முதல்வர் என்ற வகையில், பாட்னாவில் அவருக்கு பங்களா ஒதுக்கப்பட்டது. 

நிதிஷ் குமாருடனான கூட்டணி முறிந்த பின், அவர் பதவி இழக்க நேரிட்டது. தற்போது, தேஜஸ்வி, சட்டசபை எதிர்க் கட்சி தலைவராக உள்ளார். எதிர்க் கட்சி தலைவர் என்ற முறையில், அவருக்கு தற்போது வேறு ஒரு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வருக்கான பங்களாவை உடனடியாக காலி செய்யும்படி, மாநில அரசு உத்தரவிட்டது. 

அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, தேஜஸ்வி, பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசின் உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது. 

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தேஜஸ்வி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகோய் தலைமையலான அமர்வு, துணை முதல்வர் என்ற வகையில் ஒதுக்கப்பட்ட பங்களாவை தேஜஸ்வி காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

அத்துடன் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்த தேஜஸ்விக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close