மக்கள் வரி பணத்தில் சிலை வைப்பதா? ‛மாஜி’ முதல்வருக்கு கோர்ட் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 02:13 pm
sc-slams-mayawati-asks-to-repay-the-money-spent-for-her-own-statue

உத்தர பிரதேசத்தில் மக்கள் வரிப் பணத்தில் தன் மற்றும் தன் கட்சியின் சின்னத்தை சிலையாக வைத்த, மாநில முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, உத்தர பிரதேச மாநில முதல்வராக இருந்த போது,  நொய்டா மற்றும் லக்னோவில் உள்ள பூங்காக்களில், தன் முழு உருவச் சிலைகளையும், தன் கட்சி சின்னமான யானை சிலைகளையும் அரசு செலவில், பல இடங்களில் வைக்க உத்தரவிட்டார். 

அதன் படி, மக்கள் வரிப் பணத்தில், பல சிலைகள் நிறுவப்பட்டன. இதை எதிர்த்து, வழக்கறிஞர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகோய் தலைமையிலான அமர்வு, மாயாவதியின் செயலுக்க கடும் கண்டனம் தெரிவித்தது. 

தவிர, சிலைகளுக்காக செலவு செய்யப்பட்ட தொகையை, அரசு கஜானாவில் செலுத்தும்படியும் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளுக்காக, மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும், நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close