அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 02:29 pm
p-chidambaram-appears-before-ed-for-enquiry

ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற தனியார் நிறுவனம், அன்னிய முதலீட்டை பெறுவதில், சட்ட விதிகளை மீறி, அனுமதி அளித்ததாகவும், இதன் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு எதிராக, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இது தொடர்பான வழக்கு விசாரணை பல நாட்களாக நடந்து வரும் நிலையில், நேற்றைய விசாரணையில், சிதம்பரத்தின் மகன் கார்த்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம், அதிகாரிகள் சில மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம், அதிகாரிகள், முக்கிய கேள்விகளை முன்வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close