மேற்கு வங்கத்தில் நடப்பது பினாமி ஆட்சி: பிரதமர் மோடி தாக்கு

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 06:19 pm
didi-eyes-delhi-has-left-bengal-to-middlemen-pm-modi

‛‛மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்; ஆனால், அங்கு நடப்பதோ, பினாமி ஆட்சி. மக்கள் பணத்தை கொள்ளையடித்த சிட்பண்டு மாேசடியாளர்களை காப்பாற்றும் பினாமியாக மம்தா செயல்படுகிறார்’’ என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், மேற்கு வங்க மக்களின் நம்பிக்கை பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய மம்தா பானர்ஜி, அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். அவருக்கு இப்போது, டில்லிக்கு சென்று மத்திய ஆட்சி கட்டிலை பிடிக்க ஆசை வந்துவிட்டது. 

அதனால், மேற்கு வங்கத்தையும், மாநில மக்களையும் மறந்துவிட்டார். மேற்கு வங்கத்தில் நடப்பது மம்தா ஆட்சி அல்ல. அது ஒரு பினாமி ஆட்சி. சாரதா சிட்பண்டு ஊழல் மூலம், ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்த தாதா கும்பலின் பினாமியாக மம்தா செயல்படுகிறார். 

குற்றச்சாட்டிற்கு ஆளான ஒரு அதிகாரியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றால், அவர்களை தடுத்து நிறுத்துகிறார் மம்தா. குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக, ஒரு மாநில முதல்வரே தர்ணா செய்வது வேறெங்கும் நடந்ததில்லை. 

இதிலிருந்தே, மம்தாவை இயக்குவது யார் என்பது மக்களுக்கு புரிந்திருக்கும். மக்கள் பணத்தை சுரண்டும், அதை கொள்ளையடிக்கும் யாரையும், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு விட்டு வைக்காது. மக்கள் நலனுக்காக பாடுபடுவதே இந்த அரசின் நோக்கம்’’ என அவர் பேசினார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close