வரும் 22ல் ராமநாதபுரம் வருகிறார் அமித் ஷா!

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 01:12 pm
amit-sha-is-coming-to-tn-on-feb-22

லோக்சபா தேர்தல் ஆயத்த பணிகளில், பா.ஜ., தலைமை தீவிரமாக செயலாற்றி வருகிறது. தமிழகத்தில், ஆளும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சு வார்த்தைகளும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியதாகவே கூறப்படுகிறது. 

இந்த கூட்டணியில், பா.ஜ.,வுக்கு எத்தனை இடங்கள் என்பது வரை இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் களம் இறக்கப்படுவார் எனவும், அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இம்முறை, தமிழகத்தில் எப்படியும் வெகுவான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் பா.ஜ.,  ராமநாதபுரம் தொகுதிக்கான தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பு, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், வரும், 22ம் தேதி, ராமநாதபுரத்திற்கு, பா.ஜ., தலைவர் அமித் ஷா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிடும் அமித் ஷா, மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளார். 

அதன் பின், கும்பகோணம் அருகே, திருப்புவனத்தில் மத மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்ததற்காக படுகொலை செய்யப்பட்ட பா.ம.க., நிர்வாகி ராமலிங்கத்தின் இல்லத்திற்கு சென்று, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற உள்ளதாகவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close