நாடாளுமன்றத்தில் ஆஜராக ட்விட்டர் மறுப்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 04:40 pm
twitter-ceo-and-top-officials-decline-parliament-summon

ட்விட்டர் சமூக வலைதளத்தில், வலதுசாரி அமைப்புகளின் கருத்துக்கள் ஒடுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, நாடாளுமன்ற கமிட்டி அந்நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பிய நிலையில், அதை அந்நிறுவனம் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில், பாரபட்சமாக தங்களது கணக்குகள் முடக்கப்படுவதாகவும், தங்களது கருத்துக்கள் நீக்கப்படுவதாகவும், சில வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், 'சமூகவலைத்தள ஜனநாயகம்' என்ற அமைப்பை சேர்ந்தவர்கள், ட்விட்டர் இந்தியா அலுவலகத்தின் முன் கடந்த வாரம் போராட்டத்தில் இறங்கினார். வலதுசாரி குரல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர்கள் ட்விட்டர் மீது குற்றம் சாட்டினர். தனது விதிமுறைகளை ட்விட்டர் மாற்ற வேண்டும், என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ட்விட்டர், எல்லா விதமான அரசியல் பார்வைக்கும் தங்களது தளம் சமமாக வாய்ப்பு கொடுப்பதாகவும், எந்தவித அரசியல் கொள்கை சார்ந்தும், தங்களது விதிமுறைகள் வகுக்கப்படவில்லை, என்றும் தெளிவுபடுத்தியது. இதுதொடர்பாக, நாடாளுமன்ற ஐடி கமிட்டி விசாரணை நடத்தியது. குற்றச்சாட்டுகள் குறித்து வரும் 11ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க, ட்விட்டருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ட்விட்டர் தலைவர் ஜேக் டார்சி மற்றும் மூத்த இந்திய அதிகாரிகள் அனைவரும், நாடாளுமன்றத்தில் ஆஜராக மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close