மம்தா – காங்கிரஸ் இடையே கூட்டணி கிடையாது

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 09:47 pm
no-alliance-between-mamta-s-trinamool-congress-and-congress-in-west-bengal

மேற்கு வங்க மாநிலத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி கிடையாது என்பது உறுதியாகியுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா இதை உறுதி செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மம்தா பானர்ஜி அண்மையில் கொல்கத்தாவில் நடத்திய மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். அதே சமயம், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் மம்தாவுக்கு உடன்பாடில்லை என்று கருதப்படுகிறது. இங்கு மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்கில் தொண்டர்களை அவர் தயார்படுத்தி வருகிறார். குறிப்பாக, பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியுடனும் காங்கிரஸ் கூட்டணி வைக்காது என்று சோமன் மித்ரா இன்று தெரிவித்துள்ளார். இருப்பினும், இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி சேர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அதாவது, காங்கிரஸ் – திரிணமூல் காங்கிரஸ் இடையே கூட்டணி கிடையாது என்பதை அவரது கருத்து உறுதிப்படுத்தியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close