சரத் பவாரின் கோட்டையை கைப்பற்ற வேண்டும் – அமித் ஷாவின் கட்டளை!

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 10:08 pm
amit-shah-hopes-to-win-45-seats-in-maharastra-challenges-sharad-pawar

மகாராஷ்டிர மாநிலத்தில், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பாரமதி தொகுதியில், பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்று தொண்டர்களிடம் கட்டளையிட்டுள்ளார் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா.

நாட்டிலேயே மிக அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் மகாராஷ்டிரமும் ஒன்று. இங்கு மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜ.க. – சிவசேனா கூட்டணியும் பாரம்பரியமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடயிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சூசகமாகக் கூறியிருந்தார்.

இத்தகைய சூழலில், புனேவில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. வாக்குச்சாவடிக் குழுவினருக்கான கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, “மகாராஷ்டிரத்தில் 45 தொகுதிகளுக்கும் குறைவாக நாம் வெற்றி பெற்றால், அதை உண்மையான வெற்றியாகக் கருத முடியாது. இங்கு 45 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். குறிப்பாக, பாரமதி தொகுதியில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்’’ என்றார் அமித் ஷா.

இந்த பாரமதி தொகுதியானது, சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி.யாக உள்ள தொகுதியாகும். தேசியவாத காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியின் பெயரைக் குறிப்பிட்டு அமித் ஷா கட்டளையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close