நான் பதவி விலகியதற்கு ராகுல் காந்திதான் காரணம் – எஸ்.எம்.கிருஷ்ணா

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 06:28 am
i-had-left-the-minister-post-and-congress-party-because-of-ragul-gandhi-s-interference

மன்மோகன் சிங் அரசில் இருந்தும், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகியதற்கு ராகுல் காந்தியின் தொடர்ச்சியான தலையீடுதான் காரணம் என்று மூத்த அரசியல் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர். மன்மோகன் சிங் அரசில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். அந்த சமயத்தில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்தும், பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் விலகினார். கடந்த 2017ம் ஆண்டு மார்ச் முதல் பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மைசூர் அருகேயுள்ள மடூரில் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, ”10 ஆண்டுகளுக்கு முன் ராகுல் காந்தி, எம்.பி.யாக மட்டும்தான் இருந்தார். காங்கிரஸ் கட்சியில் அப்போது எந்தப் பதவியிலும் அவர் இல்லை. ஆனால், அனைத்து விவகாரங்களிலும் அவரது தலையீடு இருந்தது. மன்மோகன் சிங் பிரதமராக இந்தாலும்கூட, பல்வேறு விஷயங்கள் ராகுல் காந்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ச்சியான தலையீடு இருந்த நிலையில், என்னால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியவில்லை.

கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸால் அப்போது கட்டுப்படுத்த முடியவில்லை. 2ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அணிவகுத்தன. உறுதியான தலைமை இல்லாத காரணத்தினால்தான் அந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close