ஆந்திர எம்.பி.யின் வாட்ஸ் அஃப் முடக்கம்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 06:45 am
andhra-tdp-mp-s-wattsapp-account-banned

ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான சி.எம்.ரமேஷின் வாட்ஸ் அஃப் கணக்கை, அந்நிறுவனம் முடக்கி வைத்துள்ளது. தொடர்ச்சியான விதி மீறல் புகார் எழுந்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வாட்ஸ் அஃப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்களவை எம்.பி.யும், தொழில் நிறுவனங்களின் அதிபருமான ரமேஷின் வாட்ஸ் அஃப் திடீரென இயங்கவில்லை. இதுதொடர்பாக வாட்ஸ் அஃப் நிறுவனத்தை அவர் அணுகினார். அதற்கு, “உங்கள் வாட்ஸ் அஃப் கணக்கு, மிக அதிகமான விதிமீறலில் ஈடுபட்டதை நம்புவதற்கான காரணங்கள் எங்களிடம் உள்ளன. இதனால், உங்கள் கணக்கை தடை செய்ய முடிவு செய்தோம். ஏராளமான நபர்கள் உங்கள் மீது புகார் பதிவு செய்தனர். பயனாளர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மனதில் வைத்து, அதை உங்களிடம் தெரிவிக்க இயலாது’’ என்று வாட்ஸ் அஃப் நிறுவனம் பதில் அளித்துள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணியில் மத்திய அரசின் சதி இருக்கும் என்று ரமேஷ் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேச இருப்பதாகவும் அவர் கூறினார். அண்மையில், ரமேஷின் வீடு மற்றும் அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close