கூட்டணி குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்களே முடிவு செய்யலாம் – ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 08:42 am
rahul-gandhi-given-freedom-to-state-congress-leaders-to-decide-about-alliance

நாடாளுமன்றத் தேர்தலில், எந்தந்தெக் கட்சிகளுடன் கூட்டணி சேருவது என்ற முடிவை மாநில காங்கிரஸ் தலைவர்களே எடுக்கலாம் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி அனுமதியளித்திருப்பதாகத் தெரிகிறது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோருடன் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில அமைச்சர்கள், மற்றும் இவர்களது உறவினர்கள் போன்றோருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என ராகுல் காந்தி கண்டிப்புடன் தெரிவித்ததாக மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம், மாநில அளவில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி சேரலாம் என்பதை மாநில தலைவர்களே முடிவு செய்து, மேலிடத்துக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் நிர்பந்தம் கொடுக்காது எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக மூத்த தலைவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுவதற்காக 3 வேட்பாளர்களை பரிந்துரை செய்வதற்கான பட்டியலை தயாரித்து மேலிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close