ஆந்திராவில் பிரதமருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 11:10 am
tdp-mla-s-protest-against-pm-modi-in-andhra

பிரதமர் நரேந்திர மோடி இன்று, ஆந்திர மாநிலம் குண்டூர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளும் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,க்கள்,  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஆந்திராவில், தெலுங்கு தேசம் - பா.ஜ., கூட்டணியில் முறிவு ஏற்பட்ட பின் முதல் முறையாக, பிரதமர் மோடி அந்த மாநிலத்திற்கு இன்று வருகிறார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்களுடன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பிரதமர் மோடி, ஆந்திராவிற்குள் நுழைய தார்மீக ரீதியில் எந்த உரிமையும் கிடையாது என, அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால், மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பிரதமரின் வருகையை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பா.ஜ., நடத்தும் பேரணியை வெற்றிப் பேரணி என அறிவிக்க, அந்த கட்சியை சேர்ந்த பெருந்திரளானோர், குண்டூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close