லக்னோ பேரணியில் பிரியாங்காவுக்கு உற்சாக வரேவற்பு

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 01:10 pm
priyanka-gandhi-vadra-begins-up-roadshow

உத்தர பிரதேசத்தில், காங்., பொது செயலர் பிரியங்கா, தன் சகோதரரும் கட்சித் தலைவருமான ராகுலுடன் இன்று நடக்கும் பேரணியில் பங்கேற்கிறார். 

உத்தர பிரதேச மாநில கிழக்கு பகுதி பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ள, பிரியங்கா வதேரா, அந்த மாநிலத்தின் லக்னோ தொகுதியில் இன்று நடக்கும் பேரணியில் பங்கேற்கிறார். அப்போது, பொதுமக்கள் மத்தியல் உரையாற்றவும் உள்ளார்.

கட்சியில் புதிதாக பதவியை பெற்றுள்ள பிரியங்கா, இதற்கு முன், ரேபரேலி, அமேதி தொகுதிகளை தவிர, வெறெங்கும் தேர்தல் பிரசாரம் செய்ததில்லை. இந்நிலையில், முதல்முறையாக, அந்த இரு தொகுதிகளுக்கு அப்பால், லக்னோவில் நடக்கும் பேரணியில் பங்கேற்கவுள்ளார்.

அவருடன், காங்., தலைவர் ராகுலும் இந்த பேரணியில் பங்கேற்பதால், காங்., தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள், லக்னோவில் குவிந்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close