மோடி - ராகுல் இடையே போட்டி என்றால் பாஜகவுக்கு சாதகமாகிவிடும் - ஒவைஸி எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 12:00 pm
modi-vs-rahul-fight-could-be-advantage-for-bjp-rss-owaisi

பிரதமர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் இடையிலான போட்டியாக நாடாளுமன்றத் தேர்தல் அமையுமானால், அது பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் சாதகமானதாகிவிடும் என்று எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி எச்சரித்துள்ளார். 

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஒவைஸி இதைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலைப் பொருத்தரவையில் தெலுங்கானா மாநிலத்தில் டி.ஆர்.எஸ். கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம். இங்கு மொத்தமுள்ள 17 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றியை உறுதி செய்வோம். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை ஆதரிப்போம். மகாராஷ்டிரத்தில் பிரகாஷ் அம்பேத்கரை ஆதரிப்போம். உத்தரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்படுவது நல்லதல்ல. ஆனால், பா.ஜ.க. அதைத்தான் விரும்புகிறது. ஏனெனில், அப்படியொரு போட்டி அமைந்தால்தான் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் சாதகமாக இருக்கும் என்றார் அவர். நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி, வீழ்த்தப்பட்டால், ராகுல் காந்தி தலைமை பொறுப்புக்கு வருவதை பிற எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. அதே சமயம், வெற்றியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் நினைக்கின்றனர். அந்த வகையில், ராகுல் காந்திக்கு எதிரான கருத்துக்களை அவர்கள் கூறி வருகின்றனர்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close