பாஜக -சிவசேனா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 12:31 pm
sheat-sharing-talks-between-amid-shah-and-uddhav-thackarey-over-telephone

மகாராஷ்டிர மாநிலத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. மற்றும் சிவசேனா கட்சிகளிடையே நடைபெறும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது.

இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதேபோல இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 48 நாடாளுமன்றத் தொகுதிகளும், 288 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுடன், பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா, தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

அப்போது, உத்தவ் தாக்கரே 28 தொகுதிகள் வரை கேட்டதாகத் தெரிகிறது. அதேபோன்று, சட்டப்பேரவைத் தேர்தலைப் பொருத்தவரையில் கடந்த 1995ம் ஆண்டு பங்கீட்டு முறையை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தேர்தலில் சிவசேனா 169 தொகுதிகளிலும், பா.ஜ.க. 116 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், சிவசேனா 73 இடங்களையும், பா.ஜ.க. 65 இடங்களையும் கைப்பற்றிய நிலையில், கூட்டணி ஆட்சி அமைந்தது. சிவசேனாவைச் சேர்ந்த மனோகர் ஜோஷி முதல்வரானார். ஆனால், மகாராஷ்டிரத்தில் தற்போது நடைபெறும் கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க.வின் தேவேந்திர ஃபட்னவீஸ், முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close