மக்களவை உறுப்பினர்களுக்கு பிரதமர் மாேடி நன்றி!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 05:06 pm
thanks-to-all-mp-s-pm-modi-speech-at-parliament

மத்திய பா.ஜ., அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி, வரும், மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்த அரசு தலைமையிலான, இந்த ஆட்சியின் கடைசி பார்லிமென்ட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறி, உருக்கமான உரையாற்றினார். 

மக்களவையில், பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது: இந்த அவையில் வீற்றிருக்கு அனைத்து உறுப்பிர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 2014 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நான் முதல்முறையாக இந்த அவைக்குள் நுழைந்தேன். 

அப்போது, இங்கிருக்கும் எந்த நடவடிக்கையும் எனக்கு தெரியாது. எனினும், நான் புதியவன் என்ற அச்சம் ஏற்படாத வகையில், அனைத்து கட்சி உறுப்பினர்களும் எனக்கு ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களுக்கு நான் கடமை பட்டுள்ளேன். ஏழை, எளிய மக்கள் நலனுக்காக இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 

பல்வேறு சட்டதிருத்தங்கள் இந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அரசு முழு மனதுடன், நாட்டு மக்களுக்காக, 100 சதவீதத்திற்கு மேல் பணியாற்றியுள்ளது. 

இந்த அரசின் செயல்பாட்டிற்கும், நடவடிக்கைகளுக்கம் ஒத்துழைப்பு அளித்த, ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் மற்றும் பார்லிமென்ட் அலுவலர்கள் என அனைருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என பிரதமர் உருக்கமாக பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close