பெண் அமைச்சர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 05:19 pm
modi-speech-about-women-ministers-in-parliament

வீட்டை பெண்கள் பராமரிப்பது போல், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில், பெண் அமைச்சர்கள் திறம்பட செயல்படுவது பெருமை அளிப்பதாக பிரதமர் மோடி பேசினார். 

மக்களவையில், பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‛‛ நம் நாட்டில், பெண்களுக்கென தனி மரியாதை, அந்தஸ்த்து எப்போதும் இருந்து வருகிறது. அந்த வகையில் தான், அவர்கள் வீட்டில் பராமரிப்பை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் தலைமையில் தான், வீடு திறம்பட நடத்தப்படுகிறது. 

அதே போல், நாட்டின் பாதுகாப்பு, நிர்வாகத்தில் பெண் அமைச்சர்கள் ஈடுபட்டிருப்பது பெருமை அளிக்கிறது. ராணுவ அமைச்சராக, நிர்மலா சீதாராமனும், வெளியுறவு அமைச்சராக சுஷ்மா சுவராஜும் திறம்பட செயலாற்றுகின்றனர். இது, இந்த அரசுக்கு மிகுந்த பெருமையை தேடித்தந்துள்ளது’’ என அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close