எம்.பி.,க்கள் வருகை: பிரதமர் மகிழ்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 05:30 pm
pm-modi-greets-to-the-member-of-parliament

முன் எப்போதும் இல்லாத வகையில், 16வது மக்களவை கூட்டத்தில், எம்.பி.,க்களின் வருகை பதிவு திருப்தி அளிக்கும் வகையில் இருந்ததாக, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

இது குறித்து, மக்களவையில், பிரதமர் நரேந்திர மாேடி பேசுகையில், ‛‛முன் எப்போதும் இல்லாத வகையில், 16வது மக்களவையில், எம்.பி.,க்களின் வருகை பதிவு திருப்திகரமாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது, உறுப்பினர்களின் கடமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது. 

பா.ஜ., மட்டுமின்றி, எதிர் அணியை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.,க்களின் வருகையும் மிக முக்கியம் என்பதால், அவர்களில் பெரும்பாலானாேர், அதிக நாட்கள் அவை கூட்டத்தில் பங்கேற்றது ஜனநாயக அமைப்புக்கு கிடைத்த மாபெரும் பெருமையே. 

மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக எம்.பி.,க்களை இங்கு அனுப்பியுள்ளனர். எனவே எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் தங்கள் கடமை உணர்ந்து செயல்படுவதே ஜனநாயகத்திற்கு நாம் ஆற்றும் கடமை என்பதை, பெரும்பாலான உறுப்பினர்கள் உணர்ந்துள்ளனர். இது மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது’’ என அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close