எதிர்க்கட்சி தலைவரை பாராட்டிய பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 05:46 pm
modi-congratulates-to-mallikarjuna-karke

மக்களவையில், காங்., கட்சி தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை விவாதங்கள் நடந்தபோதெல்லாம், பெரும்பாலான நேரம், அவையில் இருந்து, தன் கடமையை திறம்பட ஆற்றியுள்ளதாக, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

மக்களவையின் இந்த ஆட்சிக்கான கடைசி கூட்டத் தொடரில் பேசிய பிரதமர் மாேடி, மக்களவை விவாதங்களில் பங்கேற்பது, உறுப்பினர்களின் கடமை. பெரும்பாலான நேரங்களை அவையில் செலவழிப்பது சிறந்த எம்.பி.,க்கான அழகு. 

அந்த வகையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை போலவே, எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, தன் கடமையை திறம்பட ஆற்றியுள்ளார். 

அவை நடவடிக்கைகளில் அதிக நேரம் பங்கேற்பது என்பது, பெருமைக்குரிய விஷயம். அதை அவர் செய்துள்ளார். அவருக்கு பாராட்டுகள்’’ என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close