காங்., தலைவர் ராகுலை மறைமுகமாக கலாய்த்த மோடி!

  Newstm Desk   | Last Modified : 13 Feb, 2019 05:56 pm
modi-speaks-about-rahul-gandhi-s-hug-on-parliament

மக்களையில், இந்த ஆட்சியின் கடைசி கூட்டத் தொடரில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்., தலைவரின் செயல்பாடுகளை கூறி, அவரை மறைமுகமாக கிண்டல் அடித்தார். 

அவையில், பிரதமர் மாேடி பேசுகையில், ‛‛கடந்த நான்கரை ஆண்டுகளில், இந்த சபை எத்தனையோ விசித்திரமான நிகழ்வுகளை சந்தித்துள்ளது. 

அதில், கட்டிப்பிடித்தலுக்கும், கட்டிப்பிடிக்கப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை நான் இங்கு தான் தெரிந்து கொண்டேன். கண்களால் பேசும் நயன பாஷையையும் இங்கு தான் பார்த்தேன். 

இந்த அவை உறுப்பினரின் இது போன்ற செயல்பாடுகள், ஊடகங்களுக்கும் நல்ல தீனியாக அமைந்தது. நாட்டு மக்களிடையே நகைச்சுவை உணர்வை ஊட்டியது’’ என அவர் பேசினார். 

பார்லிமென்ட்டில், பிரதமர் நரேந்திர மாேடியை, காங்., தலைவர் ராகுல் கட்டிப்பிடித்து, அதன் பின், சக உறுப்பினரை பார்த்து கண் அடித்த சம்பவம், ஊடகங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயம் குறித்து, ராகுலின் பெயரை குறிப்பிடாமல், பிரதமர் மோடி பேசினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close