முலாயம் சிங்கிற்கு நன்றி தெரிவித்து பேனர்

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 10:25 am
bjp-placed-posters-thanking-mulayam-singh-for-praising-pm-modi

நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று வாழ்த்திய சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங்கிற்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க.வினர் பேனர் வைத்துள்ளனர். 

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள வீதிகளில் இந்த பேனர்கள் தென்படுகின்றன. அதில், “முலாயம் சிங் யாதவ் அவர்களுக்கு நன்றி. 125 கோடி மக்களின் விருப்பம் என்னவென்பதை மக்களவையில் நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, மக்களவையில் நேற்று முலாயம் சிங் யாதவ் பேசும்போது, “அனைத்து மக்களையும் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் பயணத்தை முன்னெடுத்த பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறேன். இந்த அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். அதேபோல, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்’’ என்றார். அவரது கருத்தை வரவேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆரவரமான கோஷங்களை எழுப்பினர். முலாயமுக்கு அருகில் இருந்து சோனியாவின் முகம் வாடிய நிலையில் காணப்பட்டது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close