என்னை பதவி விலக வேண்டாம் என்றார் மோடி - தேவே கௌடா

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 11:03 am
deve-gowda-praises-pm-modi-as-latter-wants-him-to-remain-in-post

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால் பதவி விலக முன்வந்தேன். ஆனால், நான் பதவியில் நீடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார் என்று தேவே கௌடா தெரிவித்தார்.

16வது மக்களவையின் கடைசிக் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவுபெற்றது. இதையொட்டி, அவையில் பேசிய பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.பி.யுமான தேவே கௌடா பேசியபோது, மோடி குறித்த நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

“2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது காரசாரமான விவாதம் நடைபெற்றது. 276 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க. வெற்றி பெற்றால், நான் பதவி விலகி விடுவேன் எனக் கூறியிருந்தேன். இந்நிலையில் 282 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, பிரதமர் மோடியைச் சந்தித்து நான் பதவி விலகும் முடிவு குறித்து தெரிவித்தேன். அதற்கு அவர், தேர்தல் பிரசாரத்தையெல்லாம் கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் அனுபமிக்க அரசியல் தலைவர். ஆகவே, ராஜிநாமா செய்யக் கூடாது என கேட்டுக் கொண்டார்’’ என்றார் தேவே கௌடா.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close