முலாயம் சொன்ன உண்மையை அகிலேஷ் ஏற்றுக் கொள்ள வேண்டும் - யோகி ஆதித்யநாத்

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 12:35 pm
akilesh-yadav-should-accept-the-truth-told-by-mulayam-singh-yogi-adidyanath

நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என முலாயம் சிங் யாதவ் கூறியது முற்றிலும் உண்மையான கருத்து. அதை அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, மக்களவையில் நேற்று முலாயம் சிங் யாதவ் பேசும்போது, “அனைத்து மக்களையும் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் பயணத்தை முன்னெடுத்த பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறேன். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்புகிறேன்’’ என்றார். அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேச பா.ஜ.க. முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுதொடர்பாக கூறுகையில், “நாடாளுமன்றத்தில் முலாயம் சிங் யாதவ் என்ன பேசினாரோ, அதுதான் உண்மை. எப்போதுமே உண்மை வெற்றி பெறும். முலாயம் சிங் யாதவைப் போலவே, அவரது மகன் அகிலேஷ் யாதவும் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்’’ என்றார் யோகி. உத்தரப் பிரதேச மாநிலத்தில், தேர்தலையொட்டி மாயாவதி கட்சியுடன், அகிலேஷ் யாதவ் கூட்டணி வைத்துள்ள நிலையில், முலாயம் சிங்கின் கருத்தால் அவருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close