பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளிடையே ஒரு வித்தியாசமும் இல்லை - மாயாவதி குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 01:10 pm
mayawati-slams-both-bjp-and-congress-over-nsa-charges-on-people

மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே ஒரு வித்தியாசமும் இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு கடந்த ஆண்டு இறுதியில் அமைந்தது. இதைத்தொடர்ந்து, அங்கு பசுப் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், பசுவதை செய்த மூன்று முஸ்லிம்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் பல்கலைக்கழகத்தில் தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக 14 மாணவர்கள் மீது பா.ஜ.க. அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்விரு சம்பவங்களையும் மாயாவதி கண்டித்துள்ளார்.

“மத்தியப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசு, பா.ஜ.க.வைப் போலவே, பசுவதை செய்ததாக முஸ்லிம்களுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளது. அதேபோன்று உத்தரப் பிரதேச பா.ஜ.க. அரசு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்துவதில் இரு கட்சிகளின் அரசுகளும் எடுத்துக்காட்டாக உள்ளன. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அரசுகளுக்கிடையே என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்’’ என்றார் மாயாவதி.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close