ஜெகன் மோகன் கட்சிக்கு கூடும் மவுசு - படையெடுக்கும் எம்.பி.க்கள்

  Newstm Desk   | Last Modified : 19 Feb, 2019 09:52 am
as-lok-sabha-polls-near-up-tdp-mp-joins-ysr-congress

நாடாளுமன்றத் தேர்தலும், ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலும் ஒருசேர நெருங்கி வரும் நிலையில், அங்குள்ள எதிர்க்கட்சியான, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மவுசு கூடி வருகிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் அடுத்தடுத்து அவரது கட்சியில் இணைந்துள்ளனர்.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிர்த்து வலுவான அணியை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம், சொந்தக் கட்சியின் ஜாதகத்தை சந்திரபாபு நாயுடு கணிக்கத் தவறி வருவதாக தெரிகிறது. அவரது தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவரும், அனாகப்பள்ளி எம்.பி.யுமான எம்.ஸ்ரீநிவாஸ ராவ், கடந்த வாரம் ஜெகன் மோகன் கட்சியில் இணைந்தார். 

இந்நிலையில், அமலாபுரம் தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி.யான பி.ரவீந்திர பாபுவும் நேற்று ஜெகன் மோகன் முன்னிலையில், அவரது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராவதை மக்கள் விரும்பவில்லை என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close