கூட்டணியில் நீடிக்க பா.ஜ.க.வுக்கு சிவசேனா நிபந்தனை!

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 08:46 am
sivasena-dares-bjp-to-break-alliance-if-cm-post-was-not-shared

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ளும் நிபந்தனையை ஏற்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று சிவசேனா எச்சரித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பா.ஜ.க., சிவசேனா கட்சிகளுக்கு இடையே அண்மையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.  மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க. 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

அதேசமயம், இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. தற்போது நடைபெறும் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி ஆட்சியில், பா.ஜ.க.வைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராக இருக்கிறார்.

ஆனால், அடுத்தமுறை முதல்வர் பதவியை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு கட்சியும், மீதமுள்ள காலத்தில் இன்னோரு கட்சியும் ஏற்கும் வகையில் உடன்பாடு செய்ய வேண்டும் என்று சிவசேனா கூறி வருகிறது. இதை பா.ஜ.க. ஏற்காதபட்சத்தில் கூட்டணியில் நீடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராம்தாஸ் கடம் தெரிவித்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close