ஒரு சீட் கூட தரவில்லை: பாஜக - சிவசேனா கூட்டணியால் மத்திய அமைச்சர் அதிருப்தி

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 04:22 pm
not-even-one-seat-bjp-shiv-sena-alliance-leaves-rpi-leader-out

பாஜக மற்றும் சிவ சேனா கட்சிகள் மகாராஷ்ட்ராவில் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், கூட்டணிக்கு முக்கிய காரணமாக இருந்த தனக்கு ஒரு சீட் கூட ஒதுக்கப்படாததாக, குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அதவாலே அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா மற்றும் சிவ சேனா கட்சிகள் இடையே இருந்த விரிசல் சரிசெய்யப்பட்டு, மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளன. கூட்டணி பேச்சுவர்த்தைகள் கடந்த திங்களன்று முடிவடிந்த நிலையில், பாரதிய ஜனதா 25 இடங்களிலும், சிவ சேனா 23 இடங்களிலும் போட்டியிட முடிவெடுத்தன. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த, இந்திய குடியரசு கட்சிக்கு (RPI) ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவர் மற்றும் மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அதவாலே வருத்தம் தெரிவித்துள்ளார். 

பாஜக - சிவ சேனா இடையே இருந்த விரிசலை சரிசெய்து, கூட்டணி சேர முக்கிய காராணமாக இருந்தது நான் தான். ஆனால், எங்களுக்கு ஒரு இடம் கூட ஒதுக்காமல், தனியே விட்டுவிட்டனர். நான் தெற்கு மத்திய மும்பை தொகுதியை கேட்டிருந்தேன். ஆனால், எந்த தொகுதியையுமே ஒதுக்கவில்லை" என்று அதவாலே கூறினார். 

தலித் சமூகத்தை சேர்ந்தவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அதவாலே, தனக்கு மக்களவை தேர்தலில் இடம் ஒதுக்காவிட்டால், பாஜக - சிவ சேனா கூட்டணிக்கு தலித் சமூகத்தினர் யாருமே ஓட்டளிக்க மாட்டார்கள் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close