அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி - என்ன சொன்னார் பிரியங்காவின் கணவர்

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 11:39 am
robert-vadra-s-reply-about-joining-politics

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ராவின் கணவருமான ராபர்ட் வத்ராவிடம், அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு, தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலையான பிறகே அதுகுறித்து முடிவு செய்வேன் என்றார் அவர்.

முன்னதாக, அரசியலுக்கு வருவது குறித்த தனது விருப்பத்தை கடந்த மாதம் 28ம் தேதி சூசகமாக வெளிப்படுத்தியிருந்தார் ராபர்ட் வத்ரா. அப்போது,”சிறு வயதில் நான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்தேன். மொராதாபாதில்தான் நான் பிறந்தேன். எனினும், அதன் பிறகு எதேதோ இடங்களில் தங்கிவிட்டேன். இருப்பினும், அங்குள்ள மக்களை நான் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அதுகுறித்து செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பியபோது, “நான் இந்த நாட்டில்தான் இருக்கிறேன். நாட்டைக் கொள்ளையடித்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நான் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை. எனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை போக்கும் வரையில், அரசியலில் ஈடுபடப் போவதுமில்லை. இது உறுதி’’ என்று பதில் அளித்தார்.

வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துக்களை வாங்கிக் குவித்தாகவும், நில முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யின் வழக்கு விசாரணைகளை ராபர்ட் வத்ரா எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close