பதவிப் பேராசை பிடித்தவர்கள் உதவாக்கரை அரசை விரும்புகிறார்கள்

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 12:43 pm
people-having-political-greed-wants-helpless-govt-pm-modi

அரசியலில் பதவிப் பேராசை பிடித்த சிலர், நாட்டில் உதவாக்கரை அரசு அமைய வேண்டும் என விரும்புகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பா.ஜ.க. தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் மோடி இன்று உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

நாட்டில் புதிய நம்பிக்கை நிலவுகிறது. எது முடியாது என்று கருதப்பட்டதோ, அதெல்லாம் முடியும் என்று ஒவ்வொருவரும் உணரத் தொடங்கிவிட்டனர். இந்த நாடு ஒன்றிணைந்து போராடும். இந்தியா ஒருங்கிணைந்து வாழும். ஒற்றுமையுடன் பணியாற்றி வளர்ச்சி காணுவோம். ஒன்றுபட்டு வெல்வோம்.

நாட்டின் ராணுவ வீரர்கள் எல்லையிலும், எல்லைகளைத் தாண்டியும் அவர்களது பலத்தை நிரூபித்து வருகின்றனர். ஒட்டுமொத்த நாடும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் நாடு மேலும் பலம் பெறுவதுடன், இன்னும் வளர்ச்சியடையும். பதவிப் பேராசை பிடித்த சிலர் உதவாக்கரை அரசு அமைய வேண்டும் என விரும்புகின்றனர். இந்நிலையில், பலமான அரசால் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்பதை மக்களுக்கு தொண்டர்கள் உணர்த்த வேண்டும் என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close