காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றாக காது குத்திய அகிலேஷ்!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 01:36 pm
agilesh-yadav-comment-about-alliance-with-congress

2014 நாடாளுமன்றத் தேர்தல், 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது.  தற்போது  இந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 80 எம்.பி. தொகுதிகளில் 72 இடங்கள் பாஜக வசம் உள்ளதுடன், மாநில அரசும் அக்கட்சியின் வசமே உள்ளது.

கடந்தமுறை எம்.பி. தேர்தலின்போது மோடி அலையின் காரணமாக, பாஜக வெற்றி பெற்றதை வேண்டுமானால் ஒருவிதத்தில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மாநிலத்தின் இருபெரும் கட்சிகளாக உள்ள தங்களை மீறி, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எப்படி வெற்றிப் பெற்றதென,  சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஆராய்ச்சி செய்தன.

இரு கட்சிகளும் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டதால் ஓட்டுகள் பிரிந்ததன் காரணமாக, பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக கண்டறிந்தனர்.

இதையடுத்து, அங்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, பெரும்பாலானவற்றில் வெற்றியும் பெற்றன. தற்போது, வரும் மக்களவைத் தேர்தலிலும் இதே ஃபார்முலாவில் களமிறங்க முடிவெடுத்து, இரு கட்சிகளும்  கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடும் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

அதாவது பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும், சமாஜ்வாதி 37 இடங்களிலும் போட்டியிடுவதென முடிவு செய்துள்ளன. இதனால், உத்தரப் பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைக்கும் காங்கிரஸ் கட்சியின் கனவு தகர்ந்து போயுள்ளது.

இந்த நிலையில், சமாஜ்வாதி -பகுஜன் சமாஜ்வாதி கூட்டணியில் இணைந்துள்ள ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு, மாநிலத் தலைநகர் லக்னெளவில் நேற்று நடைபெற்றது.

அப்போது, காங்கிரஸின் மெகா கூட்டணி குறித்து அகிலேஷ் யாதவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, "காங்கிரஸ் எங்கள் கூட்டணியில் தான் உள்ளதென்று எத்தனை முறை சொல்வது?  அவர்களுக்காக தான் அமேதி, ரே -பேரலி தொகுதிகளை ஒதுக்கி வைத்துள்ளோம். காங்கிரஸ் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் எங்கள் கூட்டணியில்  இணையலாம்" என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

அகிலேஷ் யாதவின் இந்தப் பேச்சை கேட்ட காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், "என்னது.. ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிக்கு 3 சீட், காங்கிரஸுக்கு 2 சீட் தானா? நல்லா இருக்குய்யா இந்த நியாயம்? இவர் நமக்கு நல்லாவே காது குத்துறாருய்யா?!" என புலம்பியப்படி இடத்தை காலி செய்தனர்.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close