மெஹபூபா முஃப்தியை கைது செய்ய வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 01:13 pm
bjp-urges-to-arrest-mehbooba-mufti-for-supporting-banned-organisation

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புக்கு ஆதரவளிக்கும் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தியை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான கவிந்தர் குப்தா இதை வலியுறுத்தினார். இதுதொடர்பாக, அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரஸா பள்ளிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, காஷ்மீரில் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டால், இங்கும் தடை செய்யப்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்துக்கு மெஹபூபா தொடர்ந்து ஆதரவளித்து வந்தால், அவரையும் கைது செய்ய வேண்டும்’’ என்றார் அவர்.

ஜம்மு-காஷ்மீரில் சமூக, கலாசார, மதம் சார்ந்த வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருவதாக ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு கூறி வந்தது. ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை உடைக்க முயற்சிப்பதாக அந்த இயக்கத்தின் மீது குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சகம், 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close