காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு; சோனியா மீண்டும் போட்டி

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 10:33 pm
congress-releases-candidates-list-sonia-to-contest

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரே பரேலி தொகுதியிலும், ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். 

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், முதல் கட்சியாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் துவங்கியுள்ளது. இதில், உத்தர பிரதேசத்தில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பெயர்களும், குஜராத்தில் போட்டியிடும் 4 வேட்பாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரே பரேலி தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் மற்றும் ராகுல் காந்தியின் சகோதரி ப்ரியங்கா காந்தியின் பெயர் முதற்கட்ட பட்டியலில் இடம்பெறவில்லை. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close