காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது நக்ஸல்கள் வளருகின்றனர் - அமித் ஷா தாக்கு

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 09:49 am
maoist-growing-up-during-congress-rule-amit-shah

காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ, அப்போதெல்லாம் நக்ஸல்கள் வளருகின்றனர் என்று பா.ஜ.க. தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார். அதே சமயம், காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத சமயங்களில் அவர்கள் பலவீனமடைவதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில், பா.ஜ.க. தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக அமித் ஷா உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

நக்ஸலிசக் கொள்கை மேற்கு வங்க மாநிலத்தில் தோன்றியபோது, அங்கு ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. ஆந்திராவில் நக்ஸல்கள் வளர்ந்தபோதும், ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். அவர்கள் ஆட்சியில் இருந்தபோதுதான் சத்தீஸ்கரில் நக்ஸலிசம் வளர்ந்தது. ஆனால், இதே மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி, ஆட்சியில் இல்லாதபோது நக்ஸல்கள் பலவீனமடைந்துள்ளனர். 

அதே சமயம், சத்தீஸ்கரில் ரமண் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு அமைந்தபோது நக்ஸல்கள் காணாமல் போய்விட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நக்ஸல்கள் வளருக்கின்றனர். அவர்கள் ஆட்சியில் இல்லை என்றால் நக்ஸல்கள் பலவீனமடைகின்றனர். இருவருக்கும் இடையே அப்படி என்னதான் தொடர்பு இருக்கிறதோ? என்றார் அமித் ஷா.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close