காஷ்மீரிகள் தாக்கப்பட்ட விவகாரம்: பிரதமர் மோடி பேச்சு

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 07:14 pm
pm-modi-condemns-kashmiri-attack

உத்தர பிரதேசத்தில் காஷ்மீரி வியாபாரிகள் தாக்கப்பட்ட விவகாரத்தை பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சில வெறிபிடித்தவர்கள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டதாகவும், மக்கள் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது, என்றும் கூறினார். 

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், 3 காஷ்மீரி வணிகர்களை சிலர் பிரம்பால் அடித்து தாக்கினர். தாக்குதலில் ஈடுபட்ட விஷ்வ இந்து தால் அமைப்பை சேர்ந்தவர்கள் உ.பி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, ஒருசில பகுதிகளில் காஷ்மீரிகள் மீது நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், வீடியோவில் பதிவான லக்னோ சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து இன்று கான்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் விடுத்தார். நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டிய தருணம் இது என்றும் பிரதமர் கூறினார். நாட்டில் தற்போது ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது. லக்னோவில், காஷ்மீரி சகோதரர்கள் மீது சில வெறிபிடித்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். உத்தர பிரதேச அரசு இதுகுறித்து உடனடி விசாரணை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது" என்றார் மோடி. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close