ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 08:08 am
rafale-documents-not-stolen-centre

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் திருடப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியிருந்த நிலையில், தற்போது அவை கசியவிடப்பட்டதாக மட்டுமே தெரிவித்ததாக விளக்கமளித்துள்ளார்.

ரஃபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் சார்பாக அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் சில ரகசிய ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறியிருந்தார். 
ஆவணங்களை யார் திருடியது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

மத்திய அரசின் இந்த வாதத்திற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆவணங்களை மூடிமறைக்க மத்திய அரசின் சார்பில் எடுக்கப்படும் முயற்சி தான் இது, என்று குற்றம் சாட்டப்பட்டது.  இந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்றத்தில், ஆவணங்கள் திருடப்பட்டதாக தான் கூறவில்லை, அனுமதியில்லாமல் கசியவிடப்பட்டதாக மட்டுமே தெரிவித்ததாக வேணுகோபால் விளக்கமளித்துள்ளார். 

ஆவணங்கள் கசியவிடப்பட்ட தாகவே கூற முயன்ற அட்டர்னி ஜெனரல், கொஞ்சம் கடினமான வார்த்தையை பயன்படுத்தி விட்டதாக மத்திய அரசின் தரப்பில் கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close