வாரணாசியில் மீண்டும் களமிறங்குகிறார் மோடி!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 11:29 am
pm-modi-to-contest-again-in-varanasi-bjp-age-restrictions-changed

நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடவுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த முறை, குஜராத்தின் வதோதரா மற்றும் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு மோடி வெற்றி பெற்றார். பின்னர், வதோதரா தொகுதியில் ராஜிநாமா செய்தார். அதேபோல, இந்த முறையும் வாரணாசி தொகுதியுடன் சேர்த்து, மேலும் ஒரு தொகுதியில் மோடி போட்டியிடயிருப்பதாக தெரிகிறது. அதற்கான தொகுதி விரைவில் முடிவு செய்யப்படவுள்ளது.

அதே சமயம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 75 வயதுக்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதில்லை என்றும், 70 வயதை தாண்டி விட்டாலே வாய்ப்புகளை குறைத்துக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முறை அந்த விதியில் தளர்வு செய்ய பா.ஜ.க. முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. வெற்றி வாய்ப்புள்ள எந்தவொரு வேட்பாளருக்கும் வாய்ப்பளிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close