தீவிரவாதிகளின் இருப்பிடங்களுக்கே சென்று தாக்கினோம்: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 05:57 pm
hit-the-terrorists-in-their-backyard-modi

உத்தர பிரதேசத்தின் பெருநகர நொய்டாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் இருப்பிடங்களுக்கு சென்றே, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். 

உ.பி-யின் நொய்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இதுவரை யாருமே கண்டிராத நடவடிக்கையை தீவிரவாதிகளுக்கு எதிராக தனது அரசு எடுத்துள்ளதாக தெரிவித்தார். முந்தைய காங்கிரஸ் அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக போதிய நடவடிக்கையே எடுக்காததாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

"தீவிரவாதிகளை அவர்களது இருப்பிடங்களுக்கு சென்றே நாம் தாக்கினோம். இதுபோன்ற பதிலடியை தீவிரவாதிகளும் அவர்களது தலைவர்களும் எதிர்பார்க்கவில்லை. அதிகாலை 3.30 மணிக்கு, பாகிஸ்தான் தூங்கி கொண்டிருந்த நேரம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. காலை 5 மணிக்கெல்லாம் 'மோடி நம்மை தாக்கிவிட்டார்' என அவர்கள் சமூக வலைத்தளங்களில் கூறத் துவங்கினர்" என்றார் மோடி. 

மேலும், "உரி தாக்குதலின் போதும், முந்தைய அரசுகளை போல நாம் அமைதியாக இருப்போம் என தீவிரவாதிகள் எண்ணினர். ஆனால், நாம் அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்றுக் கொடுத்தோம்" என்றும் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close