கெத்து காட்டும் முதல்வர் - வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 01:10 pm
odisha-chief-minister-announces-33-reservation-for-women-in-bjd-party-candidate

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளர்களில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவ பதவியிடங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சி நெடுங்காலமாக நிலுவையில் உள்ளது. அதுதொடர்பான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோதிலும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா காலாவதியானது.

அதே சமயம், உள்ளாட்சி பதவியிடங்களில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை பெரும்பாலான மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன. நாடாளுமன்ற, சட்டப்பேரவை பதவியிடங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சிகளில், யாரும் அவர்களது வேட்பாளர் தேர்வில்கூட அதைக் கடைப்பிடிப்பதில்லை. இந்நிலையில், அதற்கெல்லாம் மாற்றாக, , உள்கட்சி வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கான 33 சதவீத ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிஸாவில் மொத்தம் 21 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close