தேரை இழுத்து தெருவில் விட்டுடாதீங்க... மன்மாேகன் சிங் அலறல்!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 11:35 am
manmohan-singh-not-ok-with-congress-offer-to-contest-from-punjab

நாட்டின் முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுனருமான மன்மாேகன் சிங்கை, வரும் லோக்சபா தேர்தலில், பஞ்சாப் மாநிலத்திலிருந்து போட்டியிடும் படி, மாநில காங்கிரசார் அழைப்பு விடுத்துள்ளனர். தேர்தல் அரசியலில் ஏற்கனவே சூடு கண்ட பூனையாக உள்ள மன்மாேகன், ‛ஆளை விடுங்கப்பா’ என்ற வகையில், தேர்தலில் போட்டியிட திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதாரத்தில், டாக்டர் பட்டம் பெற்றவர். நிதித்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வகித்த அவர், ரிசர்வ் வங்கி கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். மத்திய அரசின் திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும், மத்திய நிதியமைச்சராகவும், பொருளாதார விவகாரங்கள் துறை ஆலோசகராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 

தேர்தல் அரசியலில் களம் காணாத இவர், 1991ல், அசாம் மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்,  1999ல் நடந்த லாேக்சபா தேர்தலில், முதல் முறையாக, தெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். எனினும், அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். 

அதன் பின், அவர் வேறெந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. தேர்தல் அரசியலில் இருந்து விலகியே இருந்து வரும் அவர், தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.,யாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். 
இந்நிலையில், மன்மாேகன் சிங்கை மீண்டும் தேர்தல் களத்தில் இறக்க, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சீக்கிய மதத்தை சேர்ந்த மன்மோகனை, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வேட்பாளராக நிறுத்த, மாநில காங்கிரசார் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

1999ல் அடைந்த தேர்தல் தோல்விக்குப் பின், தேர்தல் அரசியல் என்றாலே தலைதெறிக்க ஓடும் மன்மாேகன் சிங், ஏற்கனவே பல முறை வாய்ப்பு வழங்கியும், அவர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இந்நிலையில், இம்முறை மீண்டும் அவரை களம் இறக்குவதற்கான வேலைகள் தீவிர கதியில் நடப்பதால், அவர் பீதியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பஞ்சாப் மாநில காங்கிரசார் மன்மாேகனுக்கு சிவப்பு கம்பளம் விரித்தும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மன்மாேகன் இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார். 87 வயதாகும் மன்மாேகன் சிங், இந்த தள்ளாத வயதில், தேர்தல், ஓட்டு வேட்டை, பிரசாரம் என அலைந்து திரிய வேண்டுமா என சங்கடப்படுவதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
எனினும், இம்முறை அவரை களம் இறக்காமல் விடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் காங்., மேலிடம் தீவிரமாக இருப்பதால், மன்மாேகன் மிரண்டு போய் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close