ஒரே தொகுதி...ஆனால் மூன்றுகட்டமாக தேர்தல்!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 01:11 pm
one-mp-constituency-but-three-phase-election

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்குட்பட்ட அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18 -ஆம் தேதி, ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆனால், மொத்தம்  ஆறு மக்களவைத் தொகுதிகள் மட்டுமே உள்ள ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 11 முதல் மே மாதம் 6 -ஆம் தேதி வரை, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

அதிலும் குறிப்பாக, தெற்கு காஷ்மீர் பகுதிக்குட்டப்பட்ட அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் மூன்றுகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஒரு தொகுதிக்கு மட்டும் இவ்வாறு பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, பாதுகாப்புக் கருதி இத்தொகுதியில் மட்டும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனந்த்நாக் மக்களவைத் தொகுதியின்கீழ் மொத்தம் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close